தமிழ்செய்தி.கொம்

தமிழீழ ஏதிலிகளின் மடல்கள் “நேஷனல் போஸ்டின்” மனக்கதவை தட்டியது – அனலை நிதிஸ் ச. குமாரன்
கனேடிய தேசிய ஆங்கிலப்பத்திரிகையான “நேஷனல் போஸ்ட்” என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதன் முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது.  அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம். இந்த மனமாற்றம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நேஷனல் போஸ்ட் பத்திரிகை கடந்த பல வருடங்களாக ஈழத்தமிழருக்கு எதிரான கட்டுரைகளையே எழுதி வந்துள்ளது.  குறிப்பாக, ஈழத்தமிழர் என்றால் அவர்கள் அனைவருமே புலிகள் என்றும் அவர்களில் பலர் புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்று கனடாவிற்குள் உட்புகுந்தார்கள் என்றும் பொய்யான கருத்துக்களை கனேடிய மக்கள் முன் வைத்து பிரச்சாரம் செய்து கொண்டுவந்தார்கள்.  ஸ்டீவர்ட் பெல் என்ற கட்டுரையாளர் ஈழத்தமிழருக்கு எதிரான தரக்குறைவான கட்டுரைகளையே எழுதிவந்துள்ளார்.  ஆனால், ஈழத்தமிழ் ஏதிலிகளின் மடல்களை இவரின் பந்தியூடாக கனடிய மக்கள்முன் வைக்கப்பட்டுள்ளமையானது வாய்மை எப்பொழுதும் வெல்லும் என்பதை பறைசாற்றி நிற்கின்றது.

ஆகஸ்ட் 12 (வியாழக்கிழமை) பிற்பகல் நான்கு மணிக்கு பின்னர் கனேடிய அதிகாரிகள் எம்.வி-சன்-சீ என்ற கப்பலை நெருங்கி, 59 மீற்றர் நீளமுள்ள அந்தக் கப்பலை விக்ரோறியாவிற்கு அருகேயுள்ள எஸ்குமல்ட் துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டுவந்தனர்.  பல மணிநேரங்களாக அந்த கப்பலை பரிசோதனை செய்த பின்னர், கப்பலில் வந்த 492 தமிழீழ ஏதிலிகளை இறக்கி தமது கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தங்குமிடங்களில் வைத்து சட்டப்படி செய்யவேண்டிய பணிகளை கனடிய அதிகாரிகள் செய்துகொண்டார்கள்.  குறிப்பாக, இந்த கப்பலில் வந்தவர்களில் 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்கள் அடங்குகின்றார்கள்.  ஒரு குடும்பஸ்தர் (37 வயதானவர்) ஜூலை 28-ஆம் திகதி கப்பளுக்குள்ளேயே நோய் காரணமாக இறந்துவிட்டார்.  இவரின் உடலை கடலுக்குள்ளேயே வீசிவிட்டு பயணித்தார்கள் கனடாவின் கரையை தொட்ட இந்த ஏதிலிகள்.  இறந்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை ஈழத்தில் வசிப்பதாக கனடிய அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.  மேலும், கப்பலை ஓட்டி வந்த ஓட்டுனரை யாருமே காட்டிக்கொடுக்க முன்வரவில்லை என்று கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதனிடையே, கப்பல் பசிபிக் சமுத்திரத்தில் பயணிக்கும்போதும் மற்றும் கனடிய எல்லையை தொட்ட பின்னரும் கனடிய ஊடகங்கள் இந்த ஏதிலிகளுக்கு எதிராக முழக்கமிட்டார்கள்.  இந்த கப்பலை திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று பகிரங்கமாகவே கனேடிய அரசை நிர்ப்பந்தித்தார்கள்.  ஆனால், கனேடிய அரசோ இவர்களின் கூக்குரலை செவிமடுக்காமல், கனடிய சட்ட திட்டங்களுக்கு அமைய தமது கடமையை செய்து தமிழீழ ஏதிலிகளை கனடிய நாட்டுக்குள் அனுமதித்து அவர்களின் புகலிட கோரிக்கையின் விண்ணபங்களை குடிவரவு நீதிபதி முன் சமர்ப்பித்து அவரின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றார்கள்;.  இதனிடையே, கனடிய ஊடகங்களில் குறிப்பாக நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம் மூலம் நிச்சயம் இந்த ஈழ ஏதிலிகளின் மனுவை கேட்டறியும் நீதிபதி சாதகமான தீர்ப்பையே வழங்க வழிகோணும் என்பதே சட்டவல்லுனர்களின் கருத்து.

தமிழருக்கு எதிரான கொடுமை சிறிலங்காவில் நின்றபாடில்லை

தமிழருக்கு எதிரான கொடுமைகள் சிறிலங்காவில் நின்றபாடில்லை என்று சாட்சியமாக கூறியுள்ளார்கள் தமது மடல்கள் மூலமாக நேஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு.  ஏதோ கடந்த வருடத்துடன் போர் நின்றுவிட்டதாகவும், புலிகள் தான் பயங்கரவாதத்தை சிறிலங்காவில் நடாத்தி மக்களை கொடுமைப்படுத்தியதாக கருதி செய்திகளையும் கட்டுரைகளையும் வரையும் கனேடிய செய்தித்தாபனங்களுக்கு உண்மையின் நிதர்சனம் என்ன என்பதை தெரியப்படுத்தியுள்ளார்கள் கனடாவை வந்தடைந்து இருக்கும் ஈழ ஏதிலிகள்.

உள்ளூர் மற்றும் உலக ஊடகங்களை அனுமதிக்காமலும் பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாகவும் நான்காம் ஈழப் போர் கடந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  ஆனால், உலக ஊடகங்களோ உண்மையறியாது சிறிலங்கா அரசு கொடுக்கும் செய்திகளுக்கு முன்னுரிமை தந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை தந்தது.  சில மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளின் பின்னர் சில உலக ஊடகங்கள் உண்மையான தகவல்களை தந்தது.  ஆனால் பெரும்பான்மையான உலக ஊடக அமைப்புக்கள் ஏதோ கடந்த வருடத்துடன் தமிழரின் பிரச்சனை ஏதோ தீர்ந்துவிட்டதென்ற மாயையில்தான் இன்றுவரை இருந்து வந்துள்ளனர்.  ஆனால், கனடாவை வந்தடைந்திருக்கும் ஈழ ஏதிலிகள் தான் சாட்சிகளாக இருக்கின்றார்கள்.

சிறிலங்காவில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே தாம் கனடா வந்தார்கள் என்று சொல்லும் இந்த ஈழ ஏதிலிகள் தமது மடல்கள் வாயிலாக தமது நன்றிகளை கனடாவுக்கு தெரிவித்துள்ளதுடன் தங்களைப் பற்றிய பொய்யான பரப்புரையை சிறிலங்கா அரசாங்கம் செய்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம்” என நேஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் அந்த ஏதிலிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வன்கூவரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழீழ ஏதிலிகளில் குறிப்பிட்ட சிலர் கையொப்பமிட்ட மடல் ஒன்றில் தெரிவிக்கப்படிருப்பதாவது: “முதலில் கனடிய அரசுக்கும் கனடிய மக்களையும் நாம் இருகரம் கூப்பி வணங்கி நன்றி கூறுகின்றோம். ஆதாவது பசுபிக் சமுத்திரத்தில் நாம் நின்று கொண்டு ‘நாம் இலங்கை அகதிகள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்றதும் உடனடியாக விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றி உணவு, தண்ணீர், பழங்கள், இனிப்புகள், பிஸ்கற் அளித்து மீட்டுள்ளது…உயிருக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது…இலங்கை அரசு இலங்கையில் இனப்பிரச்சனை தீர்ந்து விட்டது என்கிறது. ஆனால் அங்கு அவசரகாலச் சட்டங்களோ, பயங்கரவாதச் சட்டங்களோ அகற்றப்படவில்லை. தடுப்புக் காவலில் உள்ள அப்பாவி அரசியல் கைதிகள் விடுபடவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப் படவில்லை. இதற்கு மாறாக, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் தொலைபேசி மிரட்டல்களும் நடைபெறுகிறது. மேலும், இலங்கை அரசு தனது தனிப்பட்ட நலனுக்காக உலக ரீதியில் பொய்பிரச்சாரம் செய்கிறது…நாங்கள் ஓர் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் கனடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்பதையும் கூறுகின்றோம். நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என கூறுகிறோம்.”

கனேடிய அரசாங்கம், மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சன் சீ கப்பலில் வந்து ஏதிலிகளாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் மக்களாகிய நாம் கேட்டுக் கொள்வது மற்றும் தெரிவித்துக் கொள்வது என்று கையொப்பமிட்டு வரைந்த இரண்டாவது மடலில் கூறியிருப்பதாவது:“மிக மிக அவலப்பட்டு, உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, படுக்கை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக மொத்த நிலையில் நான்கு மாதங்களை அண்மித்த கடுமையான, கொடுமையான துன்ப நிலையில் பயணித்து வந்துள்ளோம். ஏனெனில் நாம் பிறந்த மண்ணில் இதுவரை நடந்து கொண்டிருக்கும் கொலை, ஆட்கடத்தல், வன்முறைப் பிரயோகம் போன்ற கொடுமைகளிலிருந்து எம்மைப் பாதுகாத்து எமது மற்றும் எம்மைச் சார்ந்தோரின் உயிரை உத்தரவாதப் படுத்துவதற்காகவே இந்த உன்னத நாடாகிய கனடா வந்துள்ளோம்…குடியேறியவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை அரவணைத்துக் கொண்ட தாங்கள் இந்த ஏதிலிகளையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் இந்த நாட்டுக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சட்டம், ஒழுங்கு விதிகளின்படி நடந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம்”.

ஏதிலிகளா பயங்கரவாதிகள்?

ஏதிலிகளை பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் என்பதை விடுத்து அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கையை கனடிய சட்டயாப்பில் ஏதிலிகளை எப்படி கையாளவேண்டும் என்ற ரீதியில் கனேடிய அரசாங்கமும் மற்றும் ஏதிலிகள் சம்மந்தமாக செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதும் நபர்கள் தெரிந்துகொள்வது மனிதநேய பண்புக்கு நல்லதாக அமையும்.  அதைவிடுத்து ஒரு சமுகத்தின்மீதே சேறுவாரி பூசும் அளவுக்கு ஊதி பெரிதுபடுத்தாமல் ஏதிலிகள் ஒன்றும் நாட்டுக்கு கேடானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்படுவதே பொறுப்பான காரியமாக இருக்க முடியும்.

சிறிலங்காவில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களை சாட்சிகளாக வைத்து அவர்களின் தார்மீக கோரிக்கை என்னவென்பதை அறிந்து பிரச்சனையை தீர்ப்பதுவே புத்திசாலித்தனமானது.  குறிப்பாக, இந்த கப்பலில் வந்திருக்கும் ஈழ ஏதிலிகளின் கூற்றின்;படி தாம் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறி இருக்கமாட்டோம் ஈழத்தில் சுமூகமான இயல்புநிலை தோன்றி தமிழர்கள் நிம்மதியாக தமது குடிமனைகளில் தங்க அனுமதித்தால்.  இன்றுவரை பல லட்சம் தமிழர்கள் தமது சொந்த நிலங்கள் மற்றும் குடிமனைகளை விட்டு புலம்பெயர்ந்து ஏதிலிகளாக நாட்டுக்குள்ளேயே சொல்லெணாத் துயரை அனுபவிக்கின்றார்கள்.

வன்னியை புலிகளிடம் இருந்து மீட்டது மக்களை மீளக்குடியமர்த்திவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் சிறிலங்கா அரசின் முகத்திரையை கிழிப்பாற்போல் உள்ளது வன்னியில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழரின் நிலை.  தமிழரை நிர்க்கதியாக்கிவிட்டு சிங்களவரை தமிழரின் பகுதிகளில் வேகமாக குடியேற்றிவருகின்றது சிங்கள அரசு.  இதனை இன்றுவரை எந்தவொரு உலக ஊடகமோ பகிரங்கப்படுத்தவில்லை என்பது தான் பரிதாபமான நிலை.  இது இப்படியிருக்க தமிழரின் மறுவாழ்வுக்கு என்று உலக நாடுகள் மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து பெறப்படும் உதவித்தொகைகளோ அல்லது பிற சலுகைகளோ இன்று வரை துன்பப்படும் தமிழரை போய்ச்சேரவில்லை.  மாறாக இந்த பணங்கள் அம்பாந்தோட்டையில் நிறுவப்படும் துறைமுகத்துக்கும் மற்றும் சிங்கள மக்களை தமிழரின் பிரதேசங்களில் குடியமர்த்தவே செலவிடப்படுகின்றன.  இதனை இன்றுவரை உலக நாடுகளோ அல்லது உலக பத்திரிகைகளோ வெளிக்கொண்டுவராமல் இருட்டடிப்பு செய்கின்றன.

வந்தடைந்து இருக்கும் ஈழ எதிலிகளிடமாவது இருந்து, அனைத்துலக ஊடகங்கள் சிறிலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிந்தாவது சிறிலங்காவின் பொய்ப்பரப்புரையையும் மற்றும் சிறிலங்கா அரசின் இனத்துவேச செயல்களை அம்பலப்படுத்தலாம்.  அதைவிடுத்து, ஏதிலிகளாக புகலிடம் தேடி வந்தவர்களை குறிப்பாக வந்தவர்களில் சிலருக்கு போர்க் காயங்கள் ஏற்பட்டுள்ளன மேலும் இருவர் கற்பிணித் தாய்மார்களாக உள்ளனர். அதுமட்டுமில்லாமல், 70 வயதுகளைத் தாண்டிய ஒரு இணையரும் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஐந்து வயது குழந்தைகூட ஈவு இரக்கமின்றி பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் என்கின்ற சொற்பதங்களை பாவிப்பதன் மூலமாக ஏற்கனவே வெந்துபோய் வந்திருக்கும் ஏதிலிகளை மென்மேலும் மனரீதியான தாக்கத்தை உண்டுபண்ண வழிகோணும் என்பதை மறந்தோ என்னவோ பல கனேடிய ஊடகங்கள் இவர்களுக்கு எதிரான பரப்புரைகளை செய்கின்றார்கள்.

குடிவரவு நீதிபதியின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த ஈழ ஏதிலிகள் மீது கருணை காட்டி அவர்களின் மூன்று மாதங்களுக்கு மேலான கடற்பயணத்திற்கு ஓர் ஓய்வுகொடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அகதி அந்தஸ்தை வழங்கி அமைதியான வாழ்க்கையை கனேடிய மண்ணில் ஆரம்பிக்க உதவுவதே கனேடிய அரசிற்கும், ஊடகங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் உள்ள தார்மீக பொறுப்பே ஒழியஇ அவர்களை வசைபாடி ஏதோ பொருளாதார முன்னேற்றத்துக்காக கப்பலேறிய குடியேறிகள் என்ற பார்வையை விடுத்து மனிதநேய பண்புடன் அனைவரும் செயலாற்றுவார்கள் என்று நம்புவோமாக.  இதன் முதற்படியாக வந்த நல்ல செய்திதான் வலதுசார் மற்றும் ஈழத்தமிழருக்கு எதிரான கொள்கையுடைய நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் கொள்கை மாற்றம்.  ஈழத்தமிழ் ஏதிலிகளின் கண்ணீர் மடல்களினால் வரையப்பட்ட கூற்றுக்களை உள்வாங்கி நியாயம் பக்கம் எப்பொழுதும் இருக்குமா அல்லது பத்திரிகை விற்றால் போதும் என்ற ரீதியில் நியாயமான கொள்கை மாற்றத்தை மறந்து மீண்டும் தமிழருக்கு எதிராக செயல்படுமா நேஷனல் போஸ்ட் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  நேஷனல் போஸ்ட் பத்திரிகை தமிழருக்கு எதிரான மாற்றத்தை செய்தால் நிச்சயம் பல முக்கிய கனேடிய ஊடகங்களும் அவர்களின் வழியே செல்லும் என்பது மட்டும் உண்மை.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

நயவஞ்சகரின் சூழ்ச்சியை முறியடித்து தமிழ் அகதிகளை ஏற்குமா கனடா? – அனலை நிதிஸ் ச. குமாரன்
கனடா என்ற நாடு நிலப்பரப்பினால் உலகில் இரண்டாவது பெரிய நாடாகவும், மூன்று சமுத்திரங்களை தன்னகத்தே கொண்டதாகவும் இருக்கின்றது.  எந்தளவு பெரிய நாடோ அதற்கும் மேலாக மனித நேயத்தை நேசிப்பதுடன் அதனை செயலிலும் செய்யும் நாடு.  மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழரை அரவணைத்து அவர்களை சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றி பிரஷாவுரிமையும் வழங்கி, சமத்துவத்தை பேண வழிகாட்டிக் கொண்டிருக்கும் நாடு.  இப்படிப்பட்ட நாடு இன்று ஒரு மாபெரும் சோதனை ஒன்றை சந்தித்திருக்கின்றது.

பல மாதங்களாக கப்பலில் பிரயாணத்தை செய்து இந்த வாரம் கனேடிய எல்லையை அடையும் ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பிவிட வேண்டுகோள் விடும் சிறிலங்கா அரசிற்கு துணைபோகும் சில கனேடிய ஊடகங்கள்இ அகதிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி அவர்களை எப்படியேனும் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுகின்றார்கள்.  இதற்கு கனேடிய அரசு துணைபோகுமா அல்லது கனடாவின் நன்மதிப்பை காற்றில் பறக்க விடுமா என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி.

490 தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு தாய்லாந்தை சேர்ந்த கப்பலான எச்.வி.சன் சீ கப்பல் கடந்த ஏப்ரல் மாதமளவில் புறப்பட்டது.  இந்த கப்பலில் வந்தவர்களின் இலக்கு ஆஸ்திரேலியாவை சென்றடைவது தான்.  ஆனால், ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கடுமையான போக்கினால் இந்த கப்பல் திசைமாற்றப்பட்டு பசிபிக் சமுத்திரத்தினூடாக பயணிக்க தொடங்கியது.  பல மாதங்களின் பின்னர் இந்த கப்பலை நோட்டமிட்ட உளவாளிகள், இந்த கப்பல் வட அமெரிக்காவை நோக்கி செல்வதாக அறிவித்திருந்தார்கள்.  இதனடிப்படையில், அமெரிக்க மற்றும் கனேடிய பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கையானார்கள்.  இதனை கேள்விப்பட்ட சிறிலங்கா அரசு இவர்களை எப்படியேனும் திருப்பி அனுப்ப செய்துவிட வேண்டுமென்ற துடிப்புடன் களம் இறங்கினார்கள்.

பல இடர்களுக்கு மத்தியில் இந்த கப்பல் கனடாவை வந்தடைந்துவிட்டது. அத்துடன் கனேடிய அரசும் இவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யவும், நோய் வாய்ப்பட்டிருக்கும் நபர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் ஏற்கனவே நடவடிக்கையில் இறங்கி செயல்வடிவம் கொடுக்கும் இவ்வேளையில் சிறிலங்காவின் புலனாய்வாளர்கள் இந்த தமிழ் அகதிகளுக்கு எதிராக கனேடிய ஊடகங்கள் வாயிலாக எழுதியும் விவாதங்களையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.  இவர்களின் நயவஞ்சக போக்கை முறியடித்து, கடந்த அக்டோபர் மாதம் ஓசன் லேடி என்ற கப்பலில் வந்த 76 ஈழ அகதிகளை ஏற்று அவர்களின் அகதி விண்ணப்பங்களை பரிசீலிக்கின்றார்களோ அதைப்போலவே இதனையும் கனடா செய்யும் என்ற நம்பிக்கை தமிழர் மத்தியில் இன்றும் இருக்கின்றது.  இவர்களின் கனவை கனேடிய அரசாங்கம் அழிக்காது என்பதை கனேடிய தமிழர் நம்புகின்றார்கள்.

கயவரின் சூழ்ச்சியை தவுடுபொடியாக்கி கனடாவின் பாரம்பரிய பண்பாட்டை கனேடிய அரசாங்கம் செய்யும் என்று நம்பும் கனேடிய தமிழர், ஈழத்தமிழரை வஞ்சிக்க நினைக்கும் வக்கிரப்போக்காளர்களுக்கு கனேடிய அரசு தக்க பதிலை கொடுப்பதன் மூலம் சிறிலங்காவின் சூழ்ச்சி வலையை கிழித்தெறிவதன் மூலம் மனித நேயத்தை காப்பாற்றும் கனடாவின் மதிப்பை போற்றி, கனடா நிலத்தால், வளத்தால் மட்டுமல்ல இதயத்தாலும் உயர்ந்தவர்கள் என்று தமிழ் மக்கள் என்றும் கடமைப்பாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.

ஓட ஓட துரத்தும் சிறிலங்கா

ஈழத்தில் தமது பாரம்பரிய மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது, எப்படி குருவிக்கூட்டை கல்லால் அடித்து நொறுக்கி, அனாதையாய் ஆக்குவதைப்; போலவே தான் தாமும் தமது வாழ்க்கையும் என்று இருந்த ஈழத் தமிழருக்கு வந்த சோகம் என்பது சொற்களால் வர்ணிக்க முடியாதது. இரவு பகல் பாராது வானூர்திகள் மூலம் குண்டு மழை பொழிவதும், எறிகணைகளை வீசி தமிழரை வகை தொகையின்றி அழிப்பதுமாக இருந்த சிறிலங்கா பயங்கரவாத அரசு, கடந்த சில வருடங்களாக நடைபெற்று பின்னர் கடந்த வருடத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நான்காம் ஈழப் போர் 30,000-க்கும் அதிகமான ஈழத் தமிழரை கொன்று அவர்களை சின்னாபின்னமாக்கி அவர்கள் இன்று என்ன செய்வதறியாது அகதிகளாக உள்நாட்டிலேயே அலைந்து திரிகின்றார்கள்.  மேலும் சிலர் வெளிநாடுகள் சென்று தமது வாழ்வை புதிப்பிக்கலாமென்று ஓடும்பொழுதும் அவர்களை பின்தொடருகின்றது அவர்களைப் பிடுத்திருக்கும் சனியன்.

பல நூற்றுக்கணக்கான தமிழர் இன்றும் சிங்கள அரசினால் புலி என்ற சந்தேகத்தில் தொடர்ந்தும் கைதாகி அரசாங்கப் படையினரால் பிடித்து அடைக்கப்படுகின்றார்கள்.  ஏற்கனவே 10,000-க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் மறைமுகமான இடங்களில் தடுத்து வைக்கப்படிருக்கின்றார்கள்.  இப்படியாக உள்நாட்டுக்குள்ளேயே துன்பங்களை அனுபவிக்கும் தமிழர், எப்படியேனும் நாட்டை விட்டு தப்பி புதுவாழ்க்கையை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்துடன் செல்லும் இவர்களையும் சிறிலங்கா விட்டு வைப்பதாக தெரியவில்லை.  இதற்காக சிறிலங்கா அரசாங்கம் பல லட்சம் டாலர்களை செலவழித்து தமிழர்களை உலக அரங்கில் அவர்களுக்கு இருக்கும் நற்பெயரை இல்லாதொழித்து பிரச்சார வேலைகளில் இறங்கியிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கடந்த வாரம் சர்வதேசத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.  மேலும் அவர் தெரிவிக்கையில், குறிப்பிடத்தக்க விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் குடியேற்றவாசிகளும் செல்வதாகவும் புலிகள் சிறிலங்காவில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் மேற்கொண்டு வருகின்ற ஆட்கடத்தல் நடவடிக்கை இது எனவும் குறிப்பிட்டார்.  இந்த நிலையில் சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகளின் வலையமைப்பை அழிக்க, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கும் பட்சத்தில், விடுதலைப் புலிகள் தமது வலையமைப்பை பலப்படுத்திக் கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசின் அடிவருடியாக செயல்படும் ரோஹான் குணரத்ன என்ற கல்விமான், பணத்திற்கு ஆசைப்பட்டு சிறிலங்கா அரச தரப்பினர் எழுதிக்கொடுக்கும் அறிக்கையை தமக்கு நெருங்கிய ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவருவதன் ஊடாக சர்வதேச ஊடகங்களின் கவனத்தை திசை திருப்ப எத்தனிக்கின்றார்.  இதில் கணிசமான வெற்றியையும் கண்டுள்ளார். குறிப்பாக, கடந்த வாரம் ஒரு அறிக்கையை விட்டார்.  அதில் அவர் கூறியிருந்ததாவது:  “தமிழ் அகதிகளுடனான எம. வீ.சன் சீ கப்பலைத் தொடர்ந்து, மேலும் இரண்டு அகதி கப்பல்கள் கனடா நோக்கி செல்லவிருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது…தற்போது அவர்கள் தமது பயணத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், எனினும் சன் சீ கப்பலில் உள்ள அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் எவ்வாறான தீர்வினை வழங்கும் என்பதை அவதானித்து, அதன் அடிப்படையிலேயே அவர்கள் எந்த நாடு செல்வதென்று முடிவு எடுப்பார்கள்.”

தான் ஒரு பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் என்று மார்தட்டும் ரொஹான் குணரத்ன, பல உண்மைக்கு புறம்பான அறிக்கையூடாக தனது பிழைப்பை நடாத்திக்கொண்டிருக்கின்றார்.  தனக்கு இருக்கும் சிறிலங்கா அரசுடனான செல்வாக்கினூடாக, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயங்கரவாதம் சார்ந்த பாடங்களை பல்கலைக்கழகங்களில் போதிக்கும் இவர், பொய்யைச் சொல்லியே சம்பாதிக்கும் இவரை இன்றும் உலகின் முன்னோடி ஊடகங்கள் முன்னுரிமை தருவது ஊடகத்துறைக்கே விழுந்திருக்கும் சாவுமணி என்று தான் சொல்லவேண்டும்.  பொதுவாகவே ஒரு கல்விமானின் அறிக்கையில் ஆதாரங்கள் இருக்க வேண்டும்.  ஆனால், இவரோ உண்மைக்கு புறம்பாக பல பொய்க்குற்றச்சாட்டுக்களை பல வருடங்களாக தமிழருக்கு எதிராக அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

கடந்த அக்டோபர் மாதம் வந்தடைந்த 76 ஈழ அகதிகள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்றும் அவர்களை கனேடிய அரசு நாட்டை விட்டு அனுப்பவேண்டும் என்று அறிக்கை விட்ட இந்த குணரத்னாவின் கூற்றை ஏற்க மறுத்தது கனேடிய அரசு.  பல மாதங்கள் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், அனைத்து ஈழ அகதிகளும் உண்மையிலேயே அகதிகள் தான் என்றும் இவர்கள் புலிகள் அமைப்பினரை சேர்ந்தவர்கள் இல்லையெனவும் கனேடிய அரசு தெரிவித்து இவர்களின் அகதி விண்ணப்பத்தை இரு வருடங்களிற்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது.  இன்று, அதே போன்றே குணரத்ன கூறுகின்றார், இந்த கப்பலை ஓட்டி வருபவர் விடுதலைப்புலிகளின் கப்பலோட்டியெனவும் இவர்களை கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது எனவும் கூறுகின்றார்.

சிறிலங்காவின் சூழ்ச்சி வலைக்கு பலிக்கடாவான ‘நேஷனல் போஸ்ட்’ என்ற ஆங்கில நாளேடோ தனது ஆசிரியர் தலையங்கத்தில் இந்த ஈழ அகதிகளை ஏற்றிக்கொண்டு வரும் கப்பலை திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று கனேடிய அரசிற்கு ஆலோசனை கூறுகின்றது.  இந்த பத்திரிக்கை பல வருடங்களாக தமிழர் விரோத செய்திகளுக்கு முன்னுரிமை தரும் நாளேடு என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடிய பெருமையை சிறுமைப்படுத்த அனுமதிக்கக்கூடாது

கனேடிய வரலாறு என்பது கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரபலமானது என்றாலும், அதன் வரலாறு என்பது சில சம்பவங்களைத்தவிர மாசற்றது.  குறிப்பாக, கறுப்பினத்தவரை அமெரிக்க வெள்ளையினத்தினர் கொடுமைப்படுத்திய வேளையில், தப்பி கனடாவிற்குள் வந்தார்கள்.  அவர்களை வரவேற்று மனித நேயத்துடன் பழகினார்கள் கனேடிய மக்கள்.  வெறுப்புணர்வுகளுக்கோ அல்லது வேறெந்த காழ்ப்புணற்சிகளுக்கோ முன்னுரிமை தராது மனிதநேய பண்புடன் வாழ்ந்துவருபவர்களே கனேடிய மக்கள்.

கனேடிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா என்ற மாநிலத்தை சென்றடைந்து விட்டார்கள்.  இவர்கள் நேரடியாகவே நின்று ஈழ அகதிகளுக்கு வழங்கப்பட இருக்கும் செயல்திட்டங்களை அரச அதிகாரிகளுக்கு வழங்குவார்கள்.  சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலையில் ஏற்கனவே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ஈழ அகதிகளை சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க, விசாரணை செய்யப்படுவார்கள் என ஏற்கனவே கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் இது குறித்து தெருவிக்கையில்: “சன் சீ கப்பலை தமது அதிகாரிகள் பல வாரங்களாக அவதானித்து வருகின்றார்கள்.  அத்துடன் இந்த விடயம் குறித்து எந்தவொரு பாரதூரமான நடவடிக்கை எடுக்க எத்தனித்து உள்ளதாக நாம் கருதவில்லை…எனினும், இந்த கப்பலில் உள்ளவர்கள் யார்…எந்த காரணத்திற்காக அவர்கள் கனடா நோக்கிய பயணத்தை மேற்கொள்கின்றனர் என்பதை அறிய நாம் கரிசனை கொண்டுள்ளோம்.”

கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது தமிழர் மனங்களில் சற்று ஆறுதலாக இருந்தாலும், கனேடிய அரசு இவர்களை உண்மையான அகதிகளாக கருதி பல மாதங்கள் பயணித்து வரும் மக்களை கருணை அடிப்படையில் அணுக வேண்டுமென்பது அனைவரினதும் அவா.  இரு முன்னோடி சம்பவங்களை சாட்சியாக வைத்து இந்த சம்பவத்தை நோக்கலாம்.

முதலாவது சம்பவம் என்னவென்றால், 1914-ஆம் ஆண்டு 376 சீக்கியரை ஏற்றிக்கொண்டு கொமகட மறு என்ற ஜப்பானில் பதியப்பட்ட கப்பல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வங்குவர் கரையை வந்தடைந்த பொழுது, கனேடிய அதிகாரிகள் இந்த கப்பலை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.  இந்தியா திரும்பிய இந்த சீக்கியர்களில் 19-பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்று விட்டார்கள்.  கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், 2008-இல் 96 வருடங்களுக்கு பின்னர் அனைத்து கனேடிய மக்கள் சார்பிலும் தனது மன்னிப்பை சீக்கியரிடத்தில் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததொரு சம்பவம் என்னவென்றால், 1939-இல் 900 யூத இனத்தவரை ஏற்றிக்கொண்டு ஜேர்மனியில் பதியப்பட்ட செயின்ட் லூயிஸ் என்ற கப்பல் கியூபா மற்றும் அமெரிக்க நாடுகளினால் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தை வந்தடைந்தது.  ஆனால் கனேடிய அரசோ, இவர்களை ஏற்க மறுத்து கப்பலை திருப்பியனுப்ப, இந்த கப்பலோ பெல்ஜியம் நாட்டை சென்றடைந்தது.  பின்னர், இவர்களில் 200-பேருக்கும் அதிகமானவர்களை ஜேர்மனியின் நாஷியினர் கொன்றார்கள்.    இதற்காக சமீபத்தில் கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி மன்னிப்பு கோரியதுடன், கடந்த கால கனேடிய அரசின் நிறவெறி கொள்கையை சுட்டிக்காட்டி இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.

இப்பொழுது ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பழைமை தழுவும் கட்சியின் இரு முன்னணி தலைவர்கள் கூறிய கூற்று பொய்யாகக்கூடாது என்றால் நிச்சயம் வந்திருக்கும் ஈழ அகதிகளை அரவணைத்து அவர்களை உள்வாங்கி கனேடிய குடிமக்களாக ஏற்;கவேண்டுமென்பது தான் கனேடிய தமிழர் தமது அரசாங்கத்திடம் வைக்கும் கோரிக்கை.

அன்று சீக்கியருக்கு மற்றும் யூத இனத்தவருக்கு நேர்ந்த நிலைமை நாளை தமிழ் அகதிகளுக்கு நேர்ந்து விடக்கூடாதென்பது தான் மனித நேயத்தை நேசிக்கும் அனைவரினதும் கோரிக்கை.  வந்தவர்களை நாட்டை விட்டு அனுப்புவதை விடுத்து, சிறிலங்காவில் நிரந்தர அரசியல் உரிமையுடன் சமாதான வாழ்க்கையை தமிழர்கள் தமது தாயகத்தில் தொடர கனேடிய அரசாங்கம் சிறிலங்கா மீது அழுத்தத்தை கொடுத்து புரையோடிப்போய் இருக்கும் இனப்பிரச்சனையை தீர்ப்பதுவே தமிழர்கள் அகதிகளாக வருவதை நிறுத்த முடியும்.  அதைவிடுத்து சிறிலங்காவின் பொய் பிரச்சாரத்தை கேட்டு தமிழரை மேலும் பல இன்னல்களுக்கு ஆளாக்க முனைய கனேடிய அரசு துணைபோகக் கூடாது.

இன்று 15,000-க்கும் அதிகமான மைல்களுக்கு அப்பால் இருந்து கனடாவின் கதவை தட்டியிருக்கும் இந்த அகதிகளே போதும் கனேடிய அரசு தமிழர் விடயத்தில் தலையிட்டு பிற நாடுகளுடன் சேர்ந்து ஒரு நிரந்தர அரசியல் தீர்வைப்பெற்றுத்தர.  அதைவிடுத்து, புலி என்ற வார்த்தையைப் பாவித்து அப்பாவி தமிழரை குழிக்குள் தள்ளிவிட எத்தனிக்கக் கூடாது கனேடிய அரசு.

கனடாவின் கடந்த கால நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி, கனடாவிற்கு அவப்பெயர் வராமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கனேடிய அரசாங்கத்திற்கு உள்ளது. அத்துடன் சிறிலங்காவின் பொய்ப்பரப்புரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களுக்கு கனேடிய தமிழர் தம்மாலான எதிர்ப்புக்களை நாகரிகமான முறையில் கடிதங்களினூடாகவோ அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மூலமாக செய்வதனால் நிச்சயம் எதிரியின் சூழ்ச்சியை முறியடித்து தர்மமே இறுதியில் வெல்லும் என்பதை நிலைநாட்ட முடியும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!
சிங்கள இனவெறி அரசால் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் துயரங்களை சித்தரிக்கும், ஓவியங்களை ”போர் முகங்கள்” என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தமிழகமெங்கும் காட்சிப்படுத்தி வருகின்றார்.

முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து வருகின்றது.

நேற்று(23.08.2010), மாலை சென்னை பிரஞ்சு கலாச்சார நிறுவனமான அலயன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்தில் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு நடந்தது.

பிரஞ்சு கலாச்சார நிறுவனமான “அலையன்சு பிரான்சைஸ்” நிறுவனத்தின் சென்னைக் கிளை இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

இயக்குநரும் நடிகருமான திரு. நாசர் கண்காட்சியை திறந்து வைத்தார்.

அலயன்சிஸ் பிரான்சிஸ் அமைப்பின் இயக்குநர் மேரி பால் சேரே, பண்பாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தாரா ரயின், கீதா வேணுகோபால், திருமதி. கமிலா நாசர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியர் புகழேந்திக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

ஏராளமான தமிழ் உணர்வாளர்களையும், பிரஞ்சு மக்களும் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள அலயன்ஸ் பிரான்சிஸ் (எண்: 24) நிறுவனக் கட்டிடத்தில் நடைபெறுகின்ற இக்கண்காட்சி 31.08.2010 வரை நடக்கிறது.

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு நஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு கிடைத்துள்ள கடிதங்களில் தாங்கள் கனடாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தங்களைப் பற்றிய பொய்யான பரப்புரையை சிறிலங்கா அரசாங்கம் செயது வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“நாங்கள் ஓர். போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.“நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என கூறுகிறோம். மேலும் கனடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்பதையும் கூறுகின்றோம்.

இரண்டாவதாக “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” எனக் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதத்தில் தாங்கள் மிக மிக அவலப்பட்டு, உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, படுக்கை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக மொத்த நிலையில் நான்கு மாதங்களை அண்மித்த கடுமையான, கொடுமையான துன்ப நிலையில் பயணித்து வந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

“குடியேறிவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை அரவணைத்துக் கொண்ட தாங்கள் இந்த ஏதிலிகளையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் இந்த நாட்டுக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சட்டம், ஒழுங்கு விதிகளின்படி நடந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம்”

இவையே மே மாதம் தாய்லாந்து வளைகுடாவில் இருந்து புறப்பட்டு கனடாவின் மேற்குக் கடற்கரையில் கடந்த கிழமை வந்திறங்கிய 492 அகதிகளின் முதலாவது வாக்குமூலங்களாக வெளிவந்துள்ளன.

இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேரந்;த தமிழர்கள் என்று நம்பப்படுகின்றது. மாநில சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களைச் சந்தித்தவர்களின்படி இவர்களில் சிலருக்கு போர்க் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருவர் கற்பிணித் தாய்மார்களாக உள்ளனர். 70 வயதுகளைத் தாண்டிய ஒரு இணையரும் இரண்டு ஊடகவியலாளர்களும் உள்ளனர். 37 வயது ஆண் கடலில் சுகவீனமுற்று இறந்துள்ளார்.

அவர்களின் 59 மீட்டர் நீளமான சரக்குக் கப்பலின் தளத்தின் மேல் கொட்டகையிட்டு அதற்குக் கீழ் படுத்திருந்ததாகவும் ஒரு கழிவறையை 50 பேர் பயன்படுத்தியதாகவும் தங்களுக்குள் லட்டு செய்து பரிமாறியதாகவும் மழைத்தண்ணீரில் தேநீர் செய்து அருந்தியதகாவும் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் குறிப்பிட்டனர்.

“என்னுடைய கணவரையும் மகனையும் விட்டு இந்த வேதனையை அனுபவித்துப் பயணம் செய்து இலங்கையில் உள்ள நரக வாழ்வில் இருந்து தப்பி வந்தேன்” என அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் குறிப்பிட்டார்.

கனடிய எல்லைச் சேவைகள் முகவம் வந்திறங்கியவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதோடு அவர்களில் முன்னாள் தமிழ்ப் புலிப் போராளிகள் உள்ளார்களா என்பதையும் உறுதிப்படுத்த முயல்கிறது. பொதுநல பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் கப்பலில் முன்னாள் போராளிகள் வந்திருக்கலாம் என நம்பப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அமைப்பின் நிதி சேகரிப்பு நடவடிக்கையாகவே இந்த கப்பல் உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டிருந்ததாக நசனல் போஸ்ட் கடந்த கிழமை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் ஆளுக்கு 40,000 தொடக்கம் 50,000 வரையிலான பணத்தைப் பெற்றுக்கொண்டு கப்பலுக்கு 1 மில்லியன் மாத்திரமே கொடுத்திருப்பார்கள். இதன் படி அவர்களுக்கு 20 மில்லியன் டொலர்கள் வரை இலாபம் வரக் கூடும். இதற்கு கனடா எந்த வகையான நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த ஆட்கடத்தல்காரர்கள் வலுவாக அவதானிப்பதாகவும் மேலும் கப்பல்கள் வரக்கூடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

RCMP யினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கப்பலில் வந்திறங்கியவர்களின் கடிதங்களின்படி இலங்கையில் இன்னமும் தமிழர்களுக்கு துன்பகரமான நிலையே நீடிக்கின்றது. அரச படைகளுக்கு தமிழ்ப் போராளிகளுக்கும் இடையில் நடந்த மிக நீண்ட போரில் இருந்து இலங்கை தற்போது மீண்டு கொண்டிருக்கிறது.

“இலங்கை அரசு இலங்கையில் இனப்பிரச்சனை தீர்ந்து விட்டது என்கிறது. ஆனால் அங்கு அவசரகாலச் சட்டங்களோ, பயங்கரவாதச் சட்டங்களோ அகற்றப்படவில்லை.” என ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “தடுப்புக் காவலில் உள்ள அப்பாவி அரசியல் கைதிகள் விடுபடவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப் படவில்லை. இதற்கு மாறாக, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் தொலைபேசி மிரட்டல்களும் நடைபெறுகிறது.” எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நசனல் போஸ்ட்

இலங்கையிலிருந்து கனடா நோக்கி வந்தடைந்த (கப்பல்)  ஈழத்தமிழர் சார்பான பொதுக் கருத்துக்கள்

கடிதம் 1:

எமது கருத்துக்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கனடிய அரசு, கனடிய மக்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் தமிழர் பேரவை மற்றும் ஏனையோருக்கும் நாம் கூறுவது என்னவெனில்:

1.      முதலில் கனடிய அரசுக்கும் கனடிய மக்களையும் நாம் இருகரம் கூப்பி வணங்;கி நன்றி கூறுகின்றோம். ஆதாவது பசுபிக் சமுத்திரத்தில் நாம் நின்று கொண்டு ‘நாம் இலங்கை அகதிகள் எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்றதும் உடனடியாக விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றி உணவு, தண்ணீர், பழங்கள், இனிப்புகள், பிஸ்கற் ஆபத்திலிருந்து மீட்டுள்ளது. உயிருக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது.

2.      இலங்கை அரசு இலங்கையில் இனப்பிரச்சனை தீர்ந்து விட்டது என்கிறது. ஆனால் அங்கு அவசரகாலச் சட்டங்களோ, பயங்கரவாதச் சட்டங்களோ அகற்றப்படவில்லை. தடுப்புக் காவலில் உள்ள அப்பாவி அரசியல் கைதிகள் விடுபடவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப் படவில்லை. இதற்கு மாறாக, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் தொலைபேசி மிரட்டல்களும் நடைபெறுகிறது. மேலும், இலங்கை அரசு தனது தனிப்பட்ட நலனுக்காக உலக ரீதியில் பொய்பிரச்சாரம் செய்கிறது.

3.      நாங்கள் ஓர். போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் கனடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்பதையும் கூறுகின்றோம். நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என கூறுகிறோம்.

கடிதம் 2:

கனடா அரசாங்கம், மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் “சன் சீ” கப்பலில் வந்து இங்கு அகதிகளாகத் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் மக்களாகிய நாம் கேட்டுக் கொள்வது மற்றும் தெரிவித்துக் கொள்வது:மிக மிக அவலப்பட்டு, உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, படுக்கை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக மொத்த நிலையில் நான்கு மாதங்களை அண்மித்த கடுமையான, கொடுமையான துன்ப நிலையில் பயணித்து வந்துள்ளோம். ஏனெனில் நாம் பிறந்த மண்ணில் இதுவரை நடந்து கொண்டிருக்கும் கொலை, ஆட்கடத்தல், வன்முறைப் பிரயோகம் போன்ற கொடுமைகளிலிருந்து எம்மைப் பாதுகாத்து எமது மற்றும் எம்மைச் சார்ந்தோரின் உயிரை உத்தரவாதப் படுத்துவதற்காகவே இந்த உன்னத நாடாகிய கனடா வந்துள்ளோம்.

குடியேறிவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை அரவணைத்துக் கொண்ட தாங்கள் இந்த ஏதிலிகளையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் இந்த நாட்டுக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சட்டம், ஒழுங்கு விதிகளின்படி நடந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம்.

- சன் சீ கப்பலில் வந்த தமிழ் மக்கள்

கருத்தியல் போரில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை – சேரமான்
யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டு ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகக் கடந்த ஆண்டு மே 18ஆம் நாளன்று சிங்கள அரசு பிரகடனம் செய்து கொண்ட பொழுதும், பதினைந்து மாதங்கள் எட்டியுள்ள நிலையிலும் உலகத் தமிழினத்தின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவைத் துடைத்தெறிய முடியாத கையாலாகாத நிலையிலேயே தொடர்ந்தும் சிங்களம் உள்ளது.

வன்னிப் போர் முடிவுக்கு வந்த மறுகணமே போர்க்களத்தில் இருந்து தனது கவனத்தை புகலிட தேசங்களை நோக்கி சிங்களம் குவிமையப்படுத்திக் கொண்டதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை உடைத்தெறியும் போர்வையில், புகலிட தமிழீழத் தேசிய அமைப்புக்களையும், தமிழகத்தின் தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் குறிவைத்து தனது காய்களையும் நகர்த்தத் தொடங்கியிருந்தது.

இதன் முதன்மை மூலோபாயமாக தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பதையும், அதனூடாக ஆயுதப் போராட்டத்தின் மீதான உலகத் தமிழினத்தின் நம்பிக்கையை சிதறடிப்பதையும், இவற்றின் பெறுபேறாக உலகத் தமிழினத்தின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவை துடைத்தெறிவதையும் இலக்காகக் கொண்டு, தனது கருத்தியல் போரை சிங்களம் தொடங்கியிருந்தது.

சிங்களத்தின் இந்த மூலோபாயத்தை செயற்படுத்தும் வகையிலான கருத்துக்களையே மே 18இற்குப் பின்னர் கே.பி அவர்களும் வெளியிட்டிருந்தார். அவ்வாறான கருத்துக்களையே இப்பொழுதும் கே.பி அவர்கள் வெளியிட்டு வருகின்றார்.

ஆனாலும் கே.பியூடாகவும், தனது ஊடக வலையமைப்புக்கள் வாயிலாகவும் உலகத் தமிழர்களைக் குறிவைத்து மகிந்தர் தொடங்கிய கருத்தியல் போர் என்பது, 1997ஆம் ஆண்டில் சந்திரிகா அம்மையார் தொடங்கிய `ஜெயசிக்குறுய்` நடவடிக்கைக்கு ஒப்பான நிலையையே தற்பொழுது எட்டியுள்ளது. மெது மெதுவாக, அரக்கி அரக்கி, பதினைந்து மாதங்களில் மாங்குளத்துடன் சிக்குண்டு போன ‘ஜெயசிக்குறுய்’ நடவடிக்கை போன்று, உலகத் தமிழர்களிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்திய பின்னர், முடக்க நிலையை சிங்களத்தின் கருத்தியல் போர் எட்டியுள்ளது.

இதில் வரலாற்றின் நகைமுரண் யாதெனில், ‘ஜெயசிக்குறுய்’ நடவடிக்கையின் பொழுது மாங்குளத்தை சிங்களப் படைகள் நெருங்கிய வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி நகர் மீட்டெடுக்கப்பட்டு ‘ஜெயசிக்குறுய்’ நடவடிக்கையின் இலக்கு பின்தள்ளப்பட்டு, சந்திரிகா அம்மையாரின் கனவு வெறும் கனவாகிப் போனது. இந்நிகழ்வின் மறுபதிவாக, கடந்த யூன் மாதம் புகலிட தேசங்களில் இருந்து கே.பியின் அடிவருடிகளை கொழும்பிற்கு அழைத்து, அதனூடாக உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்தர் எடுத்த முயற்சியும், கலைந்து போன வெறும் கனவாகவே மாறிப் போயுள்ளது.

கே.பி ஆயினும் சரி, அல்லது அவரது அடிவருடிகளாயினும் சரி, அன்றி மிதவாதிகள் என்று கூறிக்கொண்டு அடிக்கடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிடுபவர்களாயினும் சரி, எவ்வளவு தூரத்திற்கு தலைகீழாக நின்றாலும், உலகத் தமிழர்களின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவை சிதறடிப்பது என்பது இவர்களுக்கு முயற்கொம்பாகவே உள்ளது.

இந்த வகையில், சிங்களத்தின் இந்த சதி முயற்சியை தடுத்து நிறுத்துவதில் முதன்மையான பாத்திரத்தை வகித்த தமிழகத் தலைவர்களான பழ.நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்களுக்கு என்றென்றும் ஈழத்தமிழர்கள் நன்றிக்குரியவர்கள்.

இன்று உலகத் தமிழர்களிடையே – குறிப்பாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே – பல்வேறு குழப்பங்கள் நிலவினாலும்கூட, இவையனைத்தையும் கடந்தும் தமிழீழக் கருத்தியலை உயிர்வாழ வைக்கும் சக்தியாக மாவீரர்களின் ஆன்மிக வல்லமையே திகழ்கின்றது. இதுவே இன்று சிங்களத்திற்கு பெரும் சவாலாகவும் விளங்குகின்றது.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளடங்கலான மாவீரர்களை இழிவுபடுத்தி செவ்வி வழங்கிய கே.பியை கடுமையாக விமர்சித்து, கே.பி குழுவிற்கு ஆதரவான தமிழ்த் தொலைக்காட்சியில் இவ்வாரம் மக்கள் வெளியிட்ட கருத்துக்கள் இதற்கு தெளிவான சான்றைப் பகர்கின்றன.

இதேநேரத்தில், உலகத் தமிழர்களிடையே அணையாத தீயாக உயிர்வாழும் தமிழீழக் கருத்தியலால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை, சிங்கள – இந்திய அரசுகளும் நன்கு புரிந்துகொண்டுள்ளன. இப்புரிதலைப் பிரதிபலிக்கும் வகையில், சிங்கள – இந்திய அரசுகளின் மூலோபாய ஆலோசனைக் கல்விமான்களாக விளங்கும் பேராசிரியர் ரொகான் குணரட்ண, கலாநிதி தயான் ஜெயத்திலக, கேணல் ஹரிகரன், பி.இராமன் ஆகியோர் வெளியிட்டிருக்

கும் ஆய்வுக் கட்டுரைகள் திகழ்கின்றன.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், கடந்த ஒரு வார காலப்பகுதியில் இந்த நான்கு `நாயன்மார்களின்` ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்திருப்பதோடு, உலகத் தமிழினத்தின் ஆழ்மனத்தின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கருத்தியல் தோற்கடிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியே தமது ஆய்வுகளையும் இவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதுபற்றிக் கருத்துக்கூறும் ரொகான் குணரட்ண, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தற்பொழுது சிறீலங்கா அரசாங்கத்திற்கு எரிச்சலூட்டும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபடுவதாகவும், எனினும் அதன் செயற்பாடுகள் மேலும் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் பட்சத்தில், இன்னும் ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் அது அச்சுறுத்தலாக மாறிவிடக்கூடும் என்றும் எச்சரிக்கின்றார்.

இவ்வாறான சூழல் தோன்றுவதை தடுத்து நிறுத்துவதற்கு, கே.பி போன்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சிறீலங்கா அரசாங்கம் பயன்படுத்துவதோடு, புலம்பெயர்ந்தோருக்கான கட்டமைப்பு ஒன்றை நிறுவி அதனூடாக தமிழீழக் கருத்தியலை புலம்பெயர்வாழ் தமிழர்களின் மனதில் இருந்து அகற்ற வேண்டும் என்றும், ரொகான் குணரட்ண ஆலோசனை வழங்குகின்றார்.

இதேதொனியில் கருத்து வெளியிட்டிருக்கும் கேணல் ஹரிகரன், புலம்பெயர்வாழ் தமிழர்களை இலக்கு வைத்து ‘சாம, பேத, தான, தண்ட’ மூலோபாயங்களை சிறீலங்கா அரசாங்கம் கையாள்கின்ற பொழுதும், அவர்களின் அடிமனதில் இருந்து தமிழீழக் கருத்தியல் அழிக்கப்படும் வரை, தனது இலக்கை சிறீலங்கா அரசாங்கத்தால் ஈட்டிவிட முடியாது என்றும் குறிப்பிடுகின்றார்.

கே.பியைப் பயன்படுத்தி புலம்பெயர்வாழ் தமிழர்களிடையே சிதைவுகளை சிறீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தினாலும்கூட, தமிழீழக் கருத்தியலை சிதறடிப்பது கடினம் என்றும், அரசியல் தீர்வின் ஊடாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் கேணல் ஹரிகரன் வலியுறுத்துகின்றார்.

இதேபாணியில் கருத்து வெளியிட்டிருக்கும் பி.இராமன், புலம்பெயர் தேசங்களில் மட்டுமன்றி தமிழகத்திலும் தமிழீழக் கருத்தியல் உயிர்வாழ்வதாகவும், இது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கின்றார்.

அண்மையில் இந்திய திரையுலக நட்சத்திரங்களின் கொழும்புப் பயணத்தை தமிழக மக்கள் முடக்கியமை, தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழலையே உணர்த்துவதாகவும், தமிழீழக் கருத்தியல் தொடர்ந்தும் உயிர்வாழும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உயிரூட்டம் பெறுவதை தடுத்து நிறுத்துவது கடினமானது என்றும், பி.இராமன் சுட்டிக் காட்டுகின்றார்.

இவர்கள் அனைவரில் இருந்து சற்று வித்தியாசமாகக் கருத்து வெளியிட்டிருக்கும் கலாநிதி தயான் ஜெயத்திலக, புலம்பெயர் தேசங்களில் உயிர்வாழும் தமிழீழக் கருத்தியலை எதிர்கொள்ள முடியாது சிறீலங்கா அரசு திண்டாடுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றார். ‘சிறீலங்கா அரசை ஆட்டிப்படைக்கும் அன்ரன் பாலசிங்கத்தின் ஆவி’ என்ற தலைப்பின் கீழ் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த சண்டே லீடர்’ வார இதழில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் தயான் ஜெயத்திலக, அனைத்துலக சமூகத்தை இலக்கு வைத்து, 1970களில் இலண்டனில் இருந்து தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தொடக்கி வைத்த ‘பன்னாட்டு அரசியல்-கருத்தியல் இயக்கம்’ என்பது, தற்பொழுது ‘தமிழீழக் கருத்தியலை’ உலக அரங்கில் நகர்த்திச் செல்வதாகவும் குறிப்பிடுகின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணங்களுக்கு ‘மிகவும் நுட்பமான மேற்குலக மயப்படுத்தப்பட்ட மார்க்சிய-யதார்த்தவாத வடிவம்’ கொடுத்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தான் உயிர்வாழ்ந்த காலத்தில் ‘தன்னைப் போன்று அனைவரையும் உருவாக்கி, சிந்திக்க வைத்தார்’ என்றும், இலண்டனில் இருந்து ‘பாலா அண்ணா’ தொடக்கி வைத்த ‘உலக மயப்படுத்தப்பட்ட தனியரசு நோக்கிய ஆதரவியல், பரப்புரை, பொது இராசதந்திர நடவடிக்கைகள்’, தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கலாநிதி தயான் ஜெயத்திலக சுட்டிக் காட்டுகின்றார்.

செப்ரம்பர் 11இற்குப் பின்னரான உலக ஒழுங்கு பற்றிய மாயைக்குள் இப்பொழுதும் சிறீலங்கா அரசு மூழ்கிக் கிடக்கின்ற பொழுதும், கொசவோவை தனியரசாக அங்கீகரித்தன் மூலம், ஜோர்ஜ் புக்ஷ் அவர்களின் காலத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து, மனிதவுரிமைகள், மனிதநேயத் தலையீடு போன்றவற்றின் அடிப்படையில் நாடுகளை பிளவுபடுத்தித் தனியரசுகளை அமைக்கும் நிலைக்குள் தற்போதைய உலக ஒழுங்கு நகர்ந்திருப்பதாகவும், கலாநிதி தயான் ஜெயத்திலக சுட்டிக் காட்டுகின்றார்.

உலக நாடுகளை அணிதிரட்டி, மிகவும் தீர்க்கமான இராசதந்திர நடவடிக்கையூடாக கடந்த ஆண்டு யுத்தத்தை சிறீலங்கா அரசு வெற்றிகொண்ட பொழுதும், தற்பொழுது ‘தெருச்சண்டியர்’ பாணியில் சிறீலங்கா அரசு முன்னெடுக்கும் பழமைவாத மரபுவழி இராசதந்திரம், ‘பாலசிங்கத்தின் ஆவியை’ எதிர்கொள்ள முடியாது திண்டாடுவதாகவும், கலாநிதி தயான் ஜெயத்திலக குறிப்பிடுகின்றார். அத்துடன், கே.பியை பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலைய

மைப்புக்களை உடைப்பதற்கு சிறீலங்கா அரசு எடுக்கும் முயற்சிகள் காத்திரமான பயனை அளிக்கப் போவதில்லை என்றும், கலாநிதி தயான் ஜெயத்திலக சுட்டிக் காட்டுகின்றார்.

ஐக்கிய நாடுகளின் ஜெனீவா செயலகத்திற்கான சிறீலங்கா அரசின் நிரந்தர தூதுவராகக் கடமையாற்றிய கலாநிதி தயான் ஜெயத்திலக, வன்னிப் போரின் இறுதிக் கணங்கில் புகலிட தேசங்களில் இருந்து தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்பட்ட பரப்புரை நடவடிக்கைகளை முறியடிப்பதில் முன்னின்று செயலாற்றியவர்.

ஒரு வகையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் மனிதநேய முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்த முதன்மை நபர்களில் கலாநிதி தயான் ஜெயத்திலகவும் ஒருவர். மே 18வரை அனைத்துலக அரங்கில் சிங்களத்தின் முதுகெலும்பாக விளங்கிய கலாநிதி தயான் ஜெயத்திலக, யுத்தம் முடிவடைந்ததும் மகிந்த சகோதரர்களால் ஓரங்கட்டப்பட்டு, மீண்டும் தற்பொழுது கொழும்பு பல்கலைக் கழகத்திற்குள் முடக்கப்பட்டிருப்பது வேறு கதை.

ஆரம்ப காலங்களில் தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட கலாநிதி தயான் ஜெயத்திலக, பின்னர் தன்னை முழுமையான சிங்கள இனவாதியாக அடையாளப்படுத்தியமையும் வேறு விடயம். ஆனால் கலாநிதி தயான் ஜெயத்திலகவும், சிங்கள – இந்தியக் கூட்டின் ஏனைய `நாயன்மார்களும்` கூறும்செய்தி ஒன்றுதான்.

அதாவது, புகலிட தேசங்களில் இன்று உயிர்வாழும் தமிழீழக் கருத்தியல், எதிர்காலத்தில் சிங்கள அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதே அது. இதனை நாம் மறு வாசிப்பிற்கு உட்படுத்தினால், தமிழீழக் கருத்தியலில் உலகத் தமிழர்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில், மாறிவரும் உலக ஒழுங்கிற்கு அமைய எதிர்காலத்தில் தமிழீழத் தனியரசு அமைவதை எவராலும் தடுத்து நிறுத்தி முடியாது என்பதே கலாநிதி தயான் ஜெயத்திலகவின் செய்தியாக அமைகின்றது என்று, நாம் கற்பிதம் செய்துகொள்ள முடியும்.

இதிலிருந்து ஒன்றை மட்டும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் இயங்குசக்தியாக விளங்குபவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அந்த மாபெரும் இயங்குசக்திக்கு ஆன்மீக வல்லமை அளிப்பவர்கள் மாவீரர்கள். முதல் மாவீரன் லெப்.சங்கர் தொடக்கம், முதற் கரும்புலி கப்டன் மில்லர், லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப்.மாலதி, முதுபெரும் தளபதி கேணல் கிட்டு, தேசத்தின் குரல் பாலா அண்ணை, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் பால்ராஜ் என நீண்டு விரிந்து செல்லும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை என்பது ஆழ – அகலங்களுக்கு அப்பாற்பட்டது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இயக்கும் சூரியத்தேவன் என்ற மாபெரும் இயங்கு

சக்தியின் நதிமூலமாக விளங்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையே இன்று தமிழீழக் கருத்தியலை உயிர்வாழ வைக்கின்றது.

இதனை எந்தவொரு சக்தியாலும் அழித்துவிடமுடியாது. இது மட்டும் உறுதி.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால்,

‘சத்தியத்தின் சாட்சியாக நின்று எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்த சத்தியத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.’ என்பதை மட்டும் இங்கு நினைவூட்டிக் கொள்ள முடியும்

நன்றி: ஈழமுரசு (12.08.2009)

இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழினத்தின் கூட்டு அரசியல் தஞ்சம் கூறும் செய்தி என்ன? ஈழமுரசிற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்
சிறீலங்காவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 14 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் விடுதலைப்புலிகள் தொடர்பாக பேசுவதை சிறீலங்கா அரசு ஒரு நாள் கூட நிறுத்துவதில்லை.

விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிறீலங்கா அரசு தொடர்ந்து விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசிவருவதன் நோக்கம் வெளிப்படையானது. அதாவது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களைளின் அரசியல் போராட்டங்களை முறியடிப்பது அதன் ஒரு நோக்கம்.

இரண்டாவது போரின் பின்னரும் தொடரும் சிறீலங்கா அரசின் வன்முறைகளின் குறியீடாக தொடர்ந்து அனைத்துலகத்தின் கதவுகளை தட்டும் தமிழ் மக்களின் அரசியல் தஞ்சம் அரசின் நயவஞ்சகத்திட்டத்தை அம்பலப்படுத்தும் என்பதாலும் அந்த அப்பாவி மக்களை விடுதலைப்புலிகளாக்கும் பணிகளை சிறீலங்கா அரசும் சிங்கள சமூகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 6ம்  நாள் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு “காலி கலந்துரையாடல் 2010″ என்ற கடல்சார் பாதுகாப்பு மாநாட்டை மேற்கொண்டிருந்தது. போர் நடந்த காலப்பகுதியில் மற்றும் அதற்கு பின்னராக  சிறீலங்காவில் இருந்து தப்பி அகதிகளாக கடல்வழியாக  பல்வேறு நாடுகளை நோக்கி தஞ்சம் கோரும் பயணத்தை மேற்கொண்டிருப்பவர்களை “பயங்கரவாதிகள்” என்று சித்திரித்து தடுக்கும் திட்டத்தை தான் அந்த மாநாடு பிரதானமாக கொண்டுள்ளது. அங்கு உரையாற்றிய சிறீலங்காவின் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய உட்பட பெரும்பாலானோர் இதை மையப்படுத்தியே தமது கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.

அத்தோடு அமெரிக்காவின் முன்னாள் தென் மற்றம் தென்கிழக்கு ஆசியாவிற்கு பொறுப்பான பிரதி பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் கலாட்ஸ்  கப்பலில் வரும் தமிழர்களை சிறீலங்காவுக்கு மீண்டும் அனுப்பப்பட வேண்டும் என்ற ஒரு பொறுப்பற்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

எனினும் அவரின் கருத்தை உடனடியாகவே வலுவாக மறுத்துள்ள அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தை சேர்ந்த அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறீலங்கா விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜிம் மக்டோனால்ட், விடுதலைப்புலிகள் அனைவரும், குற்றமிழைத்தவர்கள் அல்ல எனவும், சிறீலங்காவுக்கு அவர்கள் மீண்டும் அனுப்பப்பட்டால் துன்புறுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்த வித குற்றங்களும் சுமத்தப்படாது 11,000 ஆயிரம் தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் சிறீலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதையும் அவர் சுட்டடிக்காட்டத் தவறவில்லை.

ஆனால் சிங்கள சமூகம் தனது முயற்சிகளை தொடர்ந்த வண்ணமே உள்ளது. தமிழர்கள் என்றால் அவர்கள்” பயங்கரவாதிகள்”தான் என்ற கருத்துபட தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பேரினவாதியுமான  ரொகான் குணரத்ன இந்த கப்பலில்  உள்ளவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும் சம்பந்தப்பட்ட நாடுகள் இவர்களை நடுக்கடலில் வைத்து கைது செய்ய வேண்டும் என்றும் இந்த மாதிரியானவர்களுக்கு எதிராக ஒரு முன்னுதாரணமாக கடும் நடவடிக்ககைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்களால் மேற்கு நாடுகளுக்கு ஆபத்து என்றும் அண்மைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

றொஹான் குணரத்தினாவை பொறுத்தவரையில் அவர் சிறீலங்கா அரசினதும், சிங்கள சமூகத்தினதும் தனி மனித இராணுவம் (One man army) அவரால் ஈழத்தமிழர்களின் உரிமை போர் சந்தித்த பின்னடைவுகள் ஏராளம் என்பதுடன், இந்த மனிதாபிமானமற்ற பேரினவாதியினால் தமிழ் மக்கள் புலம்பெயர் நாடுகளில் சந்தித்த துன்பங்களும் அதிகம்.

சிங்கப்பூரை தளமாக கொண்ட நான்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பீடத்தின் தலைவராக பணியாற்றிவரும் (Head of RSIS’s International Centre for Political Violence and Terrorism Research (ICPVTR) Nanyang Technological University) குணரத்தினா தான் ஒரு பேராசிரியர் என்ற தொழில் தர்மத்தை கூடமறந்து, சிறீலங்கா அரசின் கூலிப்படையாக தனது பேரினவாதத்தை கக்கிவருகிறார்.

இவரின் கருத்துக்களை நாம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் கருத்துக்களாகவே எதிர்காலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், சிங்கப்பூர் அரச தலைவருக்கும் முறைப்பாடுகளை மேற்கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என்பது புலம்பெயர் தமிழ் சமுகத்தின் ஒருமித்த கருத்தாக மாற்றம் பெற்றுள்ளது.

மேலும் அரசியல் வன்முறைகள் தொடர்பான பீடத்தின் தலைவாரக பணியாற்றும் குணரத்தினா சிறீலங்கா அரசின் அரசியல் வன்முறை தொடர்பில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒரு இனத்தின் சிறு குழந்தை தொடக்கம் வயதானவர்கள் வரையும் பயங்கரவாதிகள் என தெரிவித்துவரும் இவரின் நடவடிக்கைகளை நாம் புறக்கணிக்க முடியாது.

இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் வன்முறைகளுக்கான முக்கியமான பங்கை குணரத்தினா என்பவன் வழங்கப்போகின்றான். காலணித்துவ சிந்தனைக்குள் மூழ்கி ஒரு சிறிய இனத்தின் அகிம்சை போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிரித்தானியா ஊடகங்கக்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த போரில் அவர் பெற்ற வெற்றி எமக்கு ஒரு முன் உதாரணம்.

புலம்பெயர் தமிழ் மக்களாகிய நாம் ஜனநாயக நாடுகளில் வாழ்கிறோம், எம்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசோ அல்லது அதன் ஊதுகுழலான குணரத்தினாவோ சுமத்த முடியாது. மேலும் புலம்பெயர் நாடுகளில் அரசியல் தஞ்சம்கோரும் மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு.

சிறீலங்கா அரசை போல அனைத்துலக நாடுகளும் நடந்துகொள்ள முடியாது. சிறீலங்காவில் போர் நிறைவுபெற்று 14 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும், புறக்கணிப்புக்களும் நின்றுவிடவில்லை. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றாக இல்லாது செய்த அவசரகாலச்சட்டமும் சிறீலங்காவில் நீக்கப்படவில்லை.

மூன்று தசாப்தத்திற்கு மேற்பட்ட சிறீலங்கா அரசின் உக்கிர இன அழிப்பில் இருந்து தப்பிக்க தமிழ் மக்கள் உலக நாடுகளில் தொடர்ந்து அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ளனர். ஆனால் தற்போது போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் முன்னரை விட அதிகளவில் கூட்டம் கூட்டமாக அரசியல் தஞ்சம் கோருவது பல தகவல்களை இந்த உலகிற்கு தெரிவித்துவருகின்றது.

•    ஈழத் தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலை என்பது போரின் போது மட்டும் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படவில்லை, அமைதியான காலப்பகுதியிலும் அது முன்னெடுக்கப்படுகின்றது.

•    போரை சிறீலங்கா அரசு முடிவுக்கு கொண்டுவந்தது ஒரு இன அழிப்பின் மூலம் தான். எனவே தற்போது அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு உள்ள அடையாளம் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் என்பதே.

•    ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு, அவர்களின் இன, காலாச்சார, பூகோள விழுமியங்கள் அழிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.

•    வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரும் இந்த மக்கள் போரில் கோரமாக தோற்கடிக்கப்பட்டு, இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற தமது அடையாளங்கள் பறிக்கப்பட்டவர்கள்.

•    இறைமை என்ற பெயரில் அழிவுக்கு உள்ளாகிய ஒரு சிறிய இனத்தில் எஞ்சியவர்கள் தான் இந்த அகதிகள்.

இதனை தான் தமது உயிர்களை பணயம் வைத்து பல மாதங்கள் கப்பலில் பயணம் செய்யும் இந்த மக்கள் உலகிற்கு அறிவிக்கின்றனர். இந்த கூட்டு அரசியல் தஞ்சம் என்பதும் ஒருவகையில் எமது அரசியல் போராட்டத்தின் ஒரு வடிவம் தான்.

இனவாத சிங்கள அரசினாலும், மனிதாபிமானமற்ற பிராந்திய நாடுகளினாலும் அழிவுக்குள்ளான ஒரு இனம் உலகில் சிறிதளவு மனிதாபிமானமும், மனித உரிமைகளும் வாழும் நாடுகளின் வாசல் கதவுகளை தட்டுகின்றனர்.

ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டு, அவர்கள் தமது தாயகத்தில் சிறிலங்கா அரசினதும், படைகளினதும் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக வாழும் நிலையை உலக நாடுகள் ஏற்படுத்தி கொடுக்கும் வரை அவர்களின் வாசல் கதவுகளை ஈழத்தமிழ் சமூகம் அகதிகளாக தட்டிக்கொண்டே இருக்கும்.

ஒரு சிறிய இனம் மீதான போரில் ஒன்றிணைந்த உலக நாடுகள் தற்போது அவர்களின் அரசியல் உரிமைக்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது. அதனை தான் ஒரு இனப்படுகொலையில் இருந்து தப்பிய இந்த சிறிய இனத்தின் மக்கள் உலகிற்கு உணர்த்தி நிற்கின்றனர்.

நன்றி: ஈழமுரசு (12.08.2009)

24வது நாளில் ஐ.நா சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணம்
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 24வது நாளில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

பரிஸ் நகரில் இருந்து 468 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 92 கிலோமீற்றர்களே இருக்கின்றன. லண்டனில் இருந்து பரிஸ் நகர் ஊடாக இதுவரை 897 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்றும் சிலர் இணைந்து நடப்பதுடன், ஏனைய பலர் ஊர்திகளில் பின்தொடர்ந்து செல்லுகின்றனர்.

இன்று மூன்றாவது நாளாக கடும் மழை பெய்து வருவதாலும், சிறிய வீதிகள் ஊடாக சிவந்தன் நடந்து செல்வதாலும், பலர் இணைந்து நடக்க முடியாது ஒரு சிலர் மட்டுமே இணைந்து நடந்து செல்ல ஏனையவர்கள் ஊர்திகளில் பின்தொடர்ந்து செல்லுகின்றனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான ஐ.நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.

ஆசை
கடினமாக உழைப்பதற்குரிய முயற்சியை ஒருவர் எப்போது உத்வேகப்படுத்துகிறார்? ஒரே ஒரு வார்த்தையில் இதற்கு பதிலைச் சொல்லிவிடலாம் – “ஆசை”.

நாயை பற்றிய ஒரு கதை. ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும் என்று எப்போது பார்த்தாலும் பெருமை பேசிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முயலை துரத்திக் கொண்டு ஓடிய அந்த நாயால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைப்பார்த்து கேலி செய்தன. ஆனால் அந்த நாய் இவ்வாறு சொல்லியது…..

“ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். முயல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. ஆனால் நான் வேடிக்கைக்காகத்தான் அதை விரட்டிக் கொண்டு ஓடினேன்”. முயலைப் பிடிப்பது எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை.

ஆனால் முயலைப் பொறுத்தவரையில் இது வாழ்வா! சாவா!! என்றதொரு போராட்டம். நாயை விட கடுமையாக முயற்சித்தது. வாழ்க்கை அதற்கு மிகவும் முக்கியமான விஷயம். ஒரே வார்த்தையில் மிகவும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம் வாழ வேண்டும் என்றதொரு “ஆசை”.

மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான வில்லியம் ஜேம்ஸ் இதனை இவ்வாறு கூறுகிறார். “விளைவைப் பற்றி நீங்கள் போதுமான அக்கறை காட்டினால் அநேகமாக நிச்சயமாக நீங்கள் அதைப் பெற்று விடுவீர்கள். நல்லவராக இருக்க விரும்பினால் நல்லவராக இருப்பீர்கள். நீங்கள் அடைய வேண்டிய விஷயங்களை உண்மையாகவே அடைய ஆசைப்பட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம்”.

“ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்”.

நீங்கள் விரும்புவதை அடைவதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது.

நீங்கள் போதுமான அக்கறைகாட்ட வேண்டும்.

மெய்யாகவே விரும்ப வேண்டும்.

ஆசை இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதில் இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய வேண்டும்.

உங்கள் எண்ணங்களின் மீதும் செயல்களின் மீதும் அதற்குப் பெரிய பாதிப்பு இருக்க வேண்டும்.

மேலும், அதை அடைந்தே தீர வேண்டும் என்பது உங்கள் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற வேண்டும்.

அந்த அளவுக்கு அது உங்களுக்கு உங்களது வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

“அத்தனைக்கும் ஆசைப்படு – ரஜனீஷ்(ஓஷோ)”

கடின உழைப்பு
எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது, அவனுடைய அதைரியமும் அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான்.

தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியக்கூடாது என்று அவன் விரும்பினான். கட்டடத்தைச் சுற்றி சுற்றி ஓடி, இயற்கையான மாரடைப்பை உண்டாக்கி மரணம் அடைய வேண்டும் என்று எண்ணினான்.

ஆகவே ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான். அதிகமாக ஓட ஓட அவனுடைய களைப்பும் அதிகமாயிற்று. களைப்பு மிகுதியாகவே, களைப்பைத் தவிர வேறு எதையும் அவனால் உணர முடியிவில்லை. படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அவனால் எண்ண முடிந்தது. படுக்கையில் படுத்து உறங்கிப் போனான். பன்னிரண்டு மணி நேரம் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கழித்தான். எழுந்த போது புத்துணர்ச்சியுடன் இருந்தான். எந்தப் பிரச்சனையும் சந்திக்க முடியும் என்கிற ஆர்வம் தன்னுள் தோன்றி இருப்பதையும் உணர்ந்தான்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல் வரிகளில் ஒன்று

“வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே”!!!

“கடின உழைப்பை முயன்று பாருங்கள்”

சுதந்திரம்
உலக நாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்தி, துப்பாக்கி, பீரங்கி, கப்பல், விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதர் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல் போர்க்களத்தில் புகுந்தார்.

“இந்த நாடு எங்களுடையது. உம்முடையதுஅல்ல…” என்ற ஒற்றை உண்மையை பிரிட்டிஷார் முன் வைத்துப் போராடினார். அந்த சத்தியத்தின் முன் எல்லா ஆயுதங்களும் கூர்மழுங்கிப் போயின. யார் அவர்? – சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் காந்தியடிகள்.

“நிராயுதபாணியில் நின்று போராடும் ஒற்றை மனிதனின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்களால் ஏன் நசுக்க முடியவில்லை?” என்று எதிர்கட்சிகள் பாய்ந்த போது சர்ச்சில் சொன்ன பதில் ஆழமானது. “அந்த மனிதன் கத்தியைய் எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியைத் தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கி எடுத்துப் போராடினால் நான் குண்டு மழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் சத்தியத்தை அல்லவா கையில் எடுத்துக் கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதை நண்பருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்றார் சர்ச்சில்.

எதிரியையும் அன்பால், அஹிம்சையால், சத்தியத்தால் பணியவைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தது. உலகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உலகத்தைப் பாதித்த நூறு போர் என்ற பட்டியலில் எழுதினால் அதில் மகாத்மா காந்தியும் ஒருவர். உலக வரலாறு அவரை ஒருபோதும் ஒதுக்காது.

இதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்வில் நடந்த மற்றுமொரு உதாரணம், ஒரு நாள் காந்தி தனது கிராமத்தில் பிரார்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு முஸ்லீம் மனிதர் காந்தியின் தொண்டையை பிடித்தார். பிடித்த உடனேயே, காந்தி குலைந்துபோய் தளதளர்த்து கீழே விழுந்தார். கீழே விழுகின்ற அந்த தருணத்தில் தனது மெல்லிய குரலில் குர்ஆனில் இருந்து சில வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகளை கேட்டவுடனேயே அந்த முஸ்லீம் மனிதர் இவ்வாறு கூறினார். “மன்னிக்கவும். தங்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்தேன்”. தங்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய வேண்டும்? என்று  வினவினார். அதற்கு காந்தி இவ்வாறு பதில் கூறினார்.

“ஒன்றே ஒன்றை மட்டும் எனக்காகச் செய், நீ என்னிடம் என்ன செய்ய முயற்சித்தாயோ அதை யரிடமும் சொல்லாதே. இல்லையென்றால், இதுவே இந்து-முஸ்லீம் மதக் கலவரத்திற்கு காரணமாக அமையும்”.

“என்னை மறந்துவிடு! உன்னை மன்னித்துவிடு!!”“Forget Me and Forgive Yourself”