Filed Under:  இலங்கை

வெள்ளை வான் கடத்தலைக் கண்டித்து வவுனியா வர்த்தகர்கள் ஹர்த்தால்!

27th July 2010   ·   0 Comments

வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தலை கண்டித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் இன்று காலையில் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வவுனியாவில் தங்குமிட விடுதி நடத்தி வருபவரான புஷ் என்று அழைக்கப்படும் மாரிமுத்து கதிர்காமராஜா(வயது 41) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டு 06 இலட்சம் ரூபாய் கப்பம் கொடுத்த பின் விடுவிக்கப்பட்டார்.

 இந்நிலையிலேயே கடைகளை காலை முதல் மதியம் வரை சுமார் 4 மணித்தியாலங்கள் வரை மூடி விட்டு வவுனியாவின் வர்த்தகர்கள் அனைவரும் சங்கத்தின் எதிரில் கூடி, அமைதியாக அமர்ந்திருந்து, எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தினர்.

 வர்த்தகர் மாரிமுத்து கதிர்காமராஜா வெள்ளை வானில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்துப் புலனாய்வு விசாரணை நடத்திக் பொலிஸார் கடத்தல்காரர்களைக் கைது செய்ய வேண்டும் என்று இவர்கள் கோரி உள்ளார்கள். இதனால் வவுனியா நகரம் முழுவதும் வெறிச் சோடிக் காணப்பட்டது.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

WRITE2

கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்: ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு அழைப்பு

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5,6,7,8 ஆம் திகதிகளில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ...