எனது “ரோல் மாடல்’ டிராவிட்: ரெய்னா
27th July 2010 · 0 Comments
“”கிரிக்கெட்டில் எனது “ரோல் மாடல்’ ராகுல் டிராவிட்,” என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், சுரேஷ் ரெய்னா இடம் பெற்றுள்ளார். காலேவில் நடந்த முதல் டெஸ்டில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. கொழும்புவில் நடக்கும் 2 வது
டெஸ்டில், காய்ச்சல் காரணமாக யுவராஜ் சிங் வெளியேற, சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள காத்திருக்கிறார் ரெய்னா.
இது குறித்து ரெய்னா கூறியது: டெஸ்ட் அரங்கில் முதன் முதலாக காலடி வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை 98 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளேன். முதல் தர போட்டிகளிலும் அசத்தியுள்ளேன். கொழும்பு டெஸ்டில் சிறப்பாக பேட்டிங் செய்ய முயற்சிப்பேன். கிரிக்கெட்டை பொறுத்த வரை எனது “ரோல் மாடல்’ ராகுல் டிராவிட் தான். கடந்த 10 ஆண்டுகளாக அவரைத் தான் பின்பற்றி வருகிறேன். விக்கெட் இல்லை: கொழும்பு டெஸ்டில் இந்திய பவுலர்கள் இஷாந்த் சர்மா, மிதுன் ஆகியோர் சிறப்பாகவே பந்து வீசினர்.
இருப்பினும் விக்கெட் கைப்பற்ற முடியவில்லை. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், சிறப்பாக பந்து வீசி விக்கெட் கைப்பற்றுவோம். இலங்கை அணி முதல் இன்னிங்சில் வலுவான ஸ்கோரை எட்டினாலும் கவலை இல்லை. இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவ்வாறு ரெய்னா தெரிவித்தார்.



