Filed Under:  உலகம்

பான் கீ மூனின் பதவி நீடிப்புக்கு இலங்கை கடும் எதிர்ப்பு

27th July 2010   ·   0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் இரண்டாம் தவணை பதவி நீடிப்புக்கு இலங்கை தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளது. 
அத்துடன், தமது எதிர்ப்புக்கு ஆதரவாக இந்தியா, ரஸ்யா,பிரேசில்,சீனா போன்ற நாடுகளையும் சேர்த்துக்கொள்ள இலங்கை எதிர்ப்பார்ப்பதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான பிரசாரங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்த அரசாங்கங்களுடன் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பான் கீ மூனின் பதவிக்காலம் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இந்தநிலையில் அவர் மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியை கொண்டிருக்கிறார்.

பான் கீ மூனுக்கு பெரும்பாலும் மேற்கத்தைய நாடுகள் தமது ஆதரவை வெளியிடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அவர் மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்த செயற்பாட்டை கொண்டிருந்தமையாகும்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம், பான் கீ மூனுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்ளும் போதே இலங்கை அரசாங்கத்திற்கான சர்வதேச ஆதரவை தெரிந்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை காவுகொண்ட வன்னி யுத்தம் தொடர்பில் விசாரணைகளை நடத்த பான் கீ மூன் நிபுணர் குழு ஒன்றை நியமித்தமையே அவர் மீது இலங்கை கொண்டுள்ள வெறுப்புக்கு காரணமாகும்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...