Filed Under:  இலங்கை

இலங்கைப் படையினரை அமைதிப் படையில் சோ்த்துள்ளமை தொடர்பாக ஐ.நா.சபையில் விவாதங்கள்

27th July 2010   ·   0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் சேர்த்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று கடும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
இன்னர் சிற்றி பிரஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, கடந்த வெள்ளிக்கிழமையும் இது தொடர்பில், செய்தியாளர்களுக்கும் பேச்சாளருக்கும் இடையில் விவாதம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினமும் இது தொடர்பிலான விவாதம் ஒன்று இடம்பெற்ற வேளையில், எல்லா விடயங்களுக்கும் விபரம் வழங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என பேச்சாளர் தெரிவித்தாக இன்னர் சிற்றி பிரஷ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சூடானில் இலங்கை இராணுவத்தினர் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தும் தீர்மானம் முன்வைக்கப்பட்ட வேளையில், கடும் எதிர்ப்புகள் வெளியாகின.

ஆயிரக்கணக்கான பொது மக்களை அரசாங்கமும் இராணுவத்தினரும் கொன்று குவித்த நிலையில், அதே இராணுவத்தினரை கொண்டு அங்கு அமைதியை காக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் மீது சர்வதேச ரீதியான விமர்சனங்கள் எழுந்தன.

எனினும் இதனை பொருட்படுத்தாத ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் புhன் கீ மூன், இலங்கை இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பினார்.

இந்தநிலையில் சூடானில் இருந்த இலங்கை இராணுவத்தினர் அங்கு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தமையை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான விவாதம் இடம்பெற்றுள்ளது.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...