Filed Under:  புலம்பெயர் தமிழர்

கனடா, மொன்றியலில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு

28th July 2010   ·   0 Comments

கடந்த 27.07.2010 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலையின் 27 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ‘கறுப்பு யூலை விழிப்பு” நிகழ்வு மொன்றியலில் இல 419, St.Roch இல் அமைந்துள்ள (பழைய இமிகிறேசன்) மண்டபத்தில் நடைபெற்றது.
 
மாலை ஆறு மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் இசை நடன நிகழ்வுகளும் சிறப்பு பேச்சுக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக  “ உறவுகளுக்கு கைகொடுப்போம்” (Connecting Families)  எனும் தொனிப்பொருளையுடைய தாயகத்தில் ஏதிலிகளாக்கப்ப்டுள்ள மக்களை காப்பாற்றும் செயற்திட்டம் பற்றிய விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றதுடன் அதில் மக்கள் கலந்துகொண்டு தமது பணியை தொடர்ந்து செய்ய முன்வந்தமை அமைந்தது.

அத்துடன் தமிழ் ஆங்கிலம் பிரெஞ்சு மொழிகளை உள்ளடக்கிய கறுப்பு யூலை ஆவணப்புத்தகம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இலங்கையை பொருளாதார ரீதியாக பலமிளக்க வைப்பது பற்றிய புதிய செயற்திட்டம் ஒன்று பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வினை கனடியத் தமிழர் பேரவையின் மொன்றியல் கிளையினர் ஏற்பாடு செய்து சிறப்புற நடத்தியிருந்தார்கள்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

WRITE2

கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்: ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு அழைப்பு

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5,6,7,8 ஆம் திகதிகளில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ...