Filed Under:  இலங்கை

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி

28th July 2010   ·   0 Comments

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினால் அமைச்சரவை பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல திக்குமுக்காடிப் போனார்.
 
தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்ட அமைச்சர் அவ்வாறான அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் தேடியறிந்து பதிலளிப்பதாகவும் கூறினார்.

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகெல்ல, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் யுஎன்பீ மெதவெல, கடற்படை பேச்சாளர் கப்டன் செனரத், விமானப் படை பேச்சார் கப்டன் நாணயக்கார மற்றும் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர் மாநாட்டின் கேள்வி நேரத்தின் போது, தமிழீழ விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் குறிப்பிட்ட இரண்டு புலி முக்கியஸ்தர்களின் மனைவிமார்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக உள்ளூர் ஆங்கில ஊடக மொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறாயின் கைது செய்யப்பட்ட புலி முக்கியஸ்தர்கள் இருவரின் மனைவிகளும் விதவையானது எவ்வாறு என கேள்வியெழுப்பினார்.

கேள்வியை மீண்டுமொரு தடவை கேட்குமாறு ஊடகவியலாளரிடம் கேட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடக அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவுமே தெரியாது என்பதுடன் விடயங்களை தேடியறிந்து பதிலளிக்கின்றேன் என்றார்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...