Filed Under:  Uncategorized

பாடகருடன் நீது சந்திரா காதல்

27th July 2010   ·   0 Comments

தீராத விளையாட்டு பிள்ளை, யாவரும் நலம் படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். பாடகர் தலேர் மெகந்தியின் தம்பி மிகா சிங்.

இவர் பாப் இசை பாடகர். இவர் ஏற்கெனவே ராக்கி சாவன்த்துடன் இணைத்து பேசப்பட்டவர். ராக்கியின் பிறந்த நாள் பார்ட்டியில் அவருக்கு திடீர் முத்தம் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார். மிகா தன்னை கேவலப்படுத்திவிட்டதாக ராக்கி புகார் கூறினார்.

 இதையடுத்து இவர்கள் உறவு முறிந்தது. இப்போது நீதுவும் மிகாவும் நெருங்கி பழகுவதாக பாலிவுட்டில் கிசு கிசு கிளம்பியுள்ளது. நீது நடித்த Ôஓய் லக்கி லக்கி ஓய்Õ படத்தில் மிகா பின்னணி பாடியிருந்தார். அப்போதுதான் இவர்களுக்குள் நட்பு மலர்ந்ததாம். இந்த நட்பு காதலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் காதலிப்பது நிஜம்தான் என்பதை உறுதிப்படுத்தும் சம்பவம் ஒன்றும் சமீபத்தில் நடந்திருக்கிறது. இந்தியில் ஒரு படத்தை தயாரிக்கிறார் நீது.

 இதில் ஒரு பாடலை மிகாதான் பாட வேண்டும் என இயக்குனரிடம் சண்டை போட்டாராம். பாடல் பதிவு உடனே நடத்த வேண்டும் என இயக்குனர் கூறியுள்ளார். அந்த நேரத்தில் மிகா மும்பையில் இல்லை. டெல்லியில¢ இருந்திருக்கிறார். படக்குழுவுடன் டெல்லிக்கே சென்றுவிட்டார் நீது. அங்கே சென்று மிகா குரலில் பாடலை பதிவு செய்தார். இந்த பாடலுக்காக நீதுவிடம் ஒரு பைசாவும் வாங்கவில்லையாம் மிகா.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...