Filed Under:  Uncategorized

கைதியாக நடிக்கிறார் நயன்தாரா

27th July 2010   ·   0 Comments

தமிழில் பாஸ் என்ற பாஸ்கரன், மலையாளத்தில் எலெக்ட்ரா, கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இடையில் வந்த பட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை. குறிப்பாக இந்தி பாடிகார்ட் ரீமேக்கில் சல்மான் கானுடன் நடிக்கவும் தமிழில் ஒரு படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவும் நயன்தாராவிடம் கேட்கப்பட்டது. அந்த படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் மலையாளத்தில்
உருவாகும் மதிலுகள்கப்புறம் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் நயன். தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நயன்தாராவை நடிக்க கேட்டனர். இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என நயன்தாரா முடிவு செய்துள்ளார். வந்த வாய்ப்புகள் கவர்ச்சி வேடங்களாக இருந்தன.

ஹோம்லியாக வந்த வேடங்களில்கூட பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என கேட்டனர். அதனால்தான் மற்ற படங்களை அவர் ஏற¢கவில்லை. மதிலுகள்கப்புறம் படத்தில் விருதுக்கான வேடம் என்பதால் அவர் நடிக்கிறார் என நயனுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
இந்த படம் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மதிலுகள் படத்தின் இரண்டாம் பாகம். இதில் நாராயணி என்ற கேரக்டரில் சிறை கைதியாக நடிக்கிறார் நயன்தாரா. சிறையில் அவர் படும் அவஸ்தைகளை பற்றி சொல்கிறதாம் படம். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க வித்யாபாலனிடம் பேசப்பட்டது. அவர் மறுக்கவே, நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஹீரோவாக நடிக்கும் மம்மூட்டியே இப்படத்தை தயாரிக்கிறார். புதியவர் பிரசாத் இயக்குகிறார்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...