Filed Under:  இலங்கை

புலிகள் இயக்கத்துக்கு உதவிய சிங்களவர்கள் இருவருக்கு 11 வருட கடூழிய சிறை!

28th July 2010   ·   0 Comments

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் படுகொலை செய்கின்றமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு தகவல்களை வழங்கி இருந்தனர் என்கிற வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட சிங்களவர்கள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 11 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தது.

மங்கள சமரவீரவை மாத்தறை அல்லது கொழும்பில் வைத்து படுகொலை செய்கின்றமைக்கு தேவையான தகவல்களை சேகரித்து புலிகளுக்கு இவர்கள் வழங்கி இருந்தனர், புலிச் சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களை பொலிஸாருக்கு வெளிப்படுத்த தவறி விட்டனர் ஆகியன இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ் சாட்சிகள், சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டு தீர்ப்பளித்தார்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

WRITE2

கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்: ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு அழைப்பு

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5,6,7,8 ஆம் திகதிகளில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ...