Filed Under:  இலங்கை

தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பிவைப்பு!

28th July 2010   ·   0 Comments

வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றியபோது திடீர் மரணம் அடைந்த குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின் சடலம் கைதடி கிழக்கில் உள்ள ஊற்றல் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதியதொரு மரண பரிசோதனைக்காக இன்று காலை 8.00 மணியளவில் தோண்டியெடுக்கப்பட்டது.

ஏற்கனவே இவரின் மரண பரிசோதனை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு அது ஒரு தற்கொலை மரணம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தர்ஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அவரின் தாயார் இந்நீதிமன்றத்துக்கு முறையிட்டமையை அடுத்தே மீண்டும் ஒரு மரண பரிசோதனைக்காக உத்தரவிடப்பட்டது. ஊர்காவல்துறை நீதிவான் இ.வசந்தசேனன் மயானத்துக்கு நேரில் வந்து சடலம் உரிய முறையில் தோண்டப்படுகின்றமையை அவதானித்தார்.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொலிஸார், சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொலிஸார், கைதடியில் தர்ஷிகாவின் பகுதியைச் சேர்ந்த கிராம சேவையாளர், தர்ஷிகாவின் உறவினர்கள் ஆகியோரும் மயானத்துக்கு வந்திருந்தார்கள். சடலம் மரண பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...