யப்பானின் சமாதான தூதுவர் அகாசியுடன் இலங்கைத் தரப்பினர் சந்தித்துப் பேச்சு!
28th July 2010 · 0 Comments
யப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் யப்பானின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் யசூசி அகாசியை அங்கு நேரில் சந்தித்து உரையாடி உள்ளார்.
இலங்கையின் போருக்குப் பிந்திய அபிவிருத்திப் பணிகள் குறித்து இப்பேச்சுக்கள் அமைந்தன. யப்பானுக்கான இலங்கைத் தூதரகம் இச்சந்திப்புக் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.



