Filed Under:  உலகம்

பாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி?

28th July 2010   ·   0 Comments

பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. சிறப்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன.

தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சற்று சுணக்கத்துடன் காணப்படுகிறது. விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...