Filed Under:  உலகம்

ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கை விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை: உயர் இராஜதந்திரி தகவல்

25th July 2010   ·   0 Comments

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் போர்க்குற்ற விவகாரங்கள் குறித்து அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த நிபுணர் குழு, இலங்கைக்கு விஜயம் செய்ய விசா கோரி இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று அமெரிக்காவில் செயலாற்றும் இலங்கை உயர் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் தலைமையில் அமெரிக்காவையும் தென்னாபிரிக்காவையும் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை கொண்ட மேற்படி ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு, செயலாளர் நாயகத்தினால் சம்பிரதாய முறைப்படி நியமிக்கப்பட்ட பின்னர் நியூயோர்க்கில் இன்னம் உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை என்றும் பிரஸ்தாப இராஜதந்திரி கூறினார்.

எவ்வாறாயினும், குழு இலங்கைக்கு விஜயம் செய்ய விசா கோராதிருப்பது ஒருபுறமிருக்க, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இவர்களுக்கு விசா கோரி விண்ணப்பித்தாலும் விசா வழங்குவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் குழுவின் செயற்பாடு பற்றி தெரிவித்த போது, தம்மால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒரு விசாரணைக் குழு அல்லவென்றும் கடந்த மே மாதம் 23 ம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட கூட்டு அறிக்கையின் குறிக்கோள்களை முன்னெடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.

குழுவின் தலைவர் மர்சூகி தருஸ்மன் ஏற்கெனவே பி.பி.சி.க்கு கருத்து தெரிவித்த போது, தமக்கும் தமது இரு சகாக்களுக்கும் விசா வழங்குவதில்லை என்ற இலங்கையின் தீர்மானம் துரதிஷ்டவசமானதே என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிலவும் உண்மை நிலையை கண்டறிவதற்கு இது தடையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

WRITE2

கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்: ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு அழைப்பு

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5,6,7,8 ஆம் திகதிகளில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ...