Filed Under:  உலகம்

மந்திரி மகனை கொன்றது தலிபான் படை

26th July 2010   ·   0 Comments

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாண அமைச்சரின் மகனை, தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மியன்இப்திகார் ஹூசைன்; இவரது ஒரே மகன் ரஷீத்(27). அவாமி தேசிய கட்சியைச் சேர்ந்த இப்திகார் ஹூசைன், தலிபான்களின் பயங்கரவாத செயலை கண்டித்து வந்தார்.

அவாமி தேசிய கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களை தலிபான்கள் ஏற்கனவே சுட்டுக் கொன்றுள்ளனர். இந்நிலையில் இப்திகார் ஹூசைனின் ஒரே மகன் ரஷீத்தை, தலைநகர் நவ்ஷெரா பகுதியில் தலிபான்கள் நேற்று சுட்டுக் கொன்றனர். அரசியல் கட்சியைச் சாராத ரஷீத், அரசு துறையில் பணிபுரிந்து வந்தார். இப்திகார் ஹூசைன் மகன் கொல்லப்பட்டதற்கு பிரதமர் கிலானியும், அதிபர் சர்தாரியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...