Filed Under:  உலகம்

ரஷ்ய உளவாளிகளுடன் புடின் ஆடிப்பாடி மகிழ்ச்சி

26th July 2010   ·   0 Comments

“அமெரிக்காவால் விடுவிக்கப்பட்ட ரஷ்ய உளவாளிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைத்துத் தரப்படும்’ என்று, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். ரஷ்யாவைச் சேர்ந்த 10 உளவாளிகள், அமெரிக்காவில் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு, வேவு பார்த்து வந்தனர். இவர்களைக் கண்டுபிடித்த அமெரிக்கா, கைது செய்தது.

பின்னர், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ரஷ்யா கைது செய்திருந்த நான்கு அமெரிக்க உளவாளிகளை விடுவித்ததற்கு பதிலாக, ரஷ்ய உளவாளிகள் 10 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ரஷ்யா வந்து சேர்ந்தனர். இந்நிலையில் நேற்று ஒரு “டிவி’க்குப் பேட்டியளித்த ரஷ்ய பிரதமர் புடின் கூறியதாவது: ரஷ்ய உளவுத் துறையான கே.ஜி.பி., உளவாளியாக கிழக்கு ஜெர்மனியில் நான் இருந்தேன். ஒரு உளவாளியாக வேலை பார்ப்பது என்பது மிகவும் கடினம்.

உங்கள் தாய்மொழியைப் போல், நீங்கள் தங்கி இருக்கும் நாட்டின் மொழியையும் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். தாய்நாட்டின் நலனுக்காக சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இப்போது ரஷ்யா திரும்பியுள்ள உளவாளிகளுக்கு நல்ல வேலை தரப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நாங்கள் சந்தித்தோம்.

வாழ்க்கை பற்றி பேசினோம். தேசிய கீதம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடினோம். யார் யார் துரோகம் செய்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். இவ்வாறு புடின் தெரிவித்தார். உளவாளிகளை அவர் எங்கு சந்தித்தார் என்பதையும், இவர்கள் பிடிபடக் காரணமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் பெயர்களையும் கூற அவர் மறுத்துவிட்டார்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...