Filed Under:  உலகம்

இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி

26th July 2010   ·   0 Comments

நேபாள சிறுமி அதிதி, கின்னசில் இடம் பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் வெளியிட்டுள்ளாள். நேபாள நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர் உத்தாப்; இவரது 3 வயது மகள் அதிதி, அண்மையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறாள். அந்த ஆல்பத்தில், அந்நாட்டு தேசிய கீதம் உட்பட, ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அதிதி பாடியும், நடித்தும் இருக்கிறாள்.

இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு இசைக் கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். விழா மேடையில், அதிதி மூன்று பாடல்களை பாடினாள். அதிதி தந்தை உத்தாப் கூறியதாவது: அதிதி பிறந்த ஆறாவது மாதத்திலேயே பேசத் தொடங்கிவிட்டாள். அவளது சகோதரி அஸ்னா பாடுவதை கூர்ந்து கவனிப்பாள். இதனால், இசையில் அவளுக்கு உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கினேன்.

அதிதி, 2 வயதிலிருந்தே பல்வேறு மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடத்தொடங்கிவிட்டாள். தற்போது, உலகிலேயே மிகக் குறைந்த வயதில் இசை ஆல்பம் வெளியிட்டவர் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அதிதியின் பெயர் இடம் பெறுவதற்காக இந்த இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. மிக சிறிய வயதில் இந்த சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை என்று கருதுகிறேன்.

எனவே, அதிதியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு உத்தாப் கூறினார். ஆனால், உத்தாப்பின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக, 2006ம் ஆண்டில், மால்டோவாவில் பிறந்த ரோமானியன் பாடகர், “சிலியோபாட்ரா ஸ்டாட்ரன்’, அதிதியின் தற்போதைய வயதிலேயே இசை ஆல்பம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...