Filed Under:  உலகம்

பிரித்தானிய பெட்ரோலியத்தின் முதன்மை செயலர் பதவியிலிருந்து ஹேவர்ட் மாற்றப்படலாம்

26th July 2010   ·   0 Comments

பிரித்தானியாவில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான பிரித்தானிய பெட்ரோலியத்தின் முதன்மை செயலர் பதவியிலிருந்து ஹேவர்ட் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணளவாக 28 வருடங்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் ஹேவர்ட்.

தற்போது இந்நிறுவனத்தின் முக்கிய பிரச்சினையாக கருதப்பட்டு வரும் எண்ணெய் கசிவு பிரச்சினையை அவர் திறம்பட கையாளவில்லை என அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆனால் மூத்த மேலாளர்கள் மற்றும் பிரித்தானிய பெட்ரோலிய அமைப்பை சார்ந்த பிரதிநிதிகளின் முழு ஆதரவும் ஹேவர்டுக்கு இருப்பதால் அவரே முதன்மை செயலர் பதவியில் நீடிப்பார் என பிரித்தானிய பெட்ரோலியம் இதுவரை கூறி வந்தது.

இருப்பினும் அமெரிக்காவின் தொடர்ந்த குற்றச்சாட்டுக்களை சமாளிக்கவும் இதனால் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை எதிர்கொள்ளவும் வசதியாக சிறிது காலம் ஹேவர்ட் மாற்றப்படுவர் எனவும் இது குறித்த இறுதி முடிவு இன்னும் 24 மணி நேரங்களுக்குள் வெளியாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...